TAMIL BOOKSHELF

சமூக நாவல்

இவை மனித சமுதாயத்தின் வாழ்வியல் சூழலையும் சமூகச் சிக்கல்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் புதினங்கள் ஆகும்.


  1. கே.எஸ்.வெங்கடரமணி: இவரால் எழுதப்பட்ட முருகன் ஓர் உழவன்(1928), கந்தன் ஒரு தேசபக்தன்(1938) ஆகிய புதினங்கள் கிராம மக்களின் வாழ்க்கை முறையையும் தேசப்பற்றையும் அடிப்படைகளாகக் கொண்டிருந்தன.
  2. 'கல்கி'ரா.கிருஷ்ணமூர்த்தி(1899-1954): இவர் எழுதிய தியாகபூமி, கள்வனின் காதலி, மகுடபதி, அலை ஒசை முதலான புதினங்கள் சாதிக் கொடுமை, விதவைக் கொடுமை, பொருந்தாமணம், விடுதலை வேட்கை ஆகியவற்றை எடுத்துரைத்தன.
  3. நாரணதுரைக் கண்ணன்: 1942-இல் நடைபெற்ற ஆகஸ்ட் புரட்சியை அடிப்படையாகக் கொண்டு தியாகத் தழும்பு என்னும் புதினத்தை இவர் உருவாக்கினார். தரங்கிணி, கோகிலா, நடுத்தெரு நாராயணன் ஆகிய புதினங்களும் இவருடையதாகும்.
  4. ர.சு.நல்லபெருமாள்: இவர் எழுதிய கல்லுக்குள் ஈரம் என்னும் புதினம் நாட்டு விடுதலையில் பெண்களின் ஈடுபாடு குறித்து பேசப்பட்டிருந்தது.
  5. ர.சு.நல்லபெருமாள்: இவர் எழுதிய கல்லுக்குள் ஈரம் என்னும் புதினம் நாட்டு விடுதலையில் பெண்களின் ஈடுபாடு குறித்து பேசப்பட்டிருந்தது.
  6. அகிலன்: பெண், எங்கே போகிறோம்?, நெஞ்சின் அலைகள், வேங்கையின் மைந்தன், சித்திரப்பாவை முதலான சமுதாய புதினங்களை இவர் எழுதியிருக்கிறார்.

இதுதவிர, வ.ரா.வின் சுந்தரி, கோதைத்தீவு, பி.எஸ்.ராமையாவின் பிரேம ஹாரம், ஆர்வியின் அணையா விளக்கு, மு.வ.வின் நெஞ்சில் ஒரு முள், அல்லி, அகல்விளக்கு, கரித்துண்டு, விந்தனின் பாலும் பாவையும், டி.கே.சீனிவாசனின் ஆடும் மாடும், சிதம்பர சுப்பிரமணியத்தின் இதயநாதம், க.நா.சு.வின் பொய்த்தேவு, எம்.வி.வெங்கடராமின் காதுகள், சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல், ரகுநாதனின் பஞ்சும் பசியும், நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர், பொன்விலங்கு, சமுதாய வீதி, டி.செல்வராஜின் மலரும் சருகும், நீல.பத்மநாபனின் தலைமுறைகள், த.ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், பாரிஸுக்குப் போ, சி.என்.அண்ணாதுரையின் பார்வதி பி.ஏ., ரங்கோன் ராதா, ஜெகசிற்பியனின் கிளிஞ்சல் கோபுரம், ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு, சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை, பொன்னீலனின் புதிய தரிசனங்கள், மறுபக்கம், அசோகமித்திரனின் தண்ணீர், அப்பாவின் சிநேகிதர், தோப்பில் முகமது மீரானின் சாய்வு நாற்காலி, எழுத்தாளர் கௌதமன் நீல்ராஜ் அவர்களின் புனிதம் தேடும் புதினம் உமா சந்திரனின் முள்ளும் மலரும், சா.கந்தசாமியின் விசாரணை கமிஷன், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், ஜெயமோகனின் ரப்பர், அன்வர் பாலசிங்கத்தின் செந்நீர் முதலான சமுதாய புதினங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.