புறாவும் கட்டெறும்பும்


The pigeon is also bound

ஓர் ஏரிக்கரையில் ஆலமரம் ஒன்று இருந்தது. அந்த ஆலமரத்தில் புறா ஒன்று வந்து அமர்ந்தது. அப்போது ஏரி நீரில் எறும்பு ஒன்று தத்தளித்த வண்ணம் உயிரிற்கு போராடுவதை கண்ட புறா வேகமாக அம் மரத்தின் இலை ஒன்றை ஒடித்து எறும்பின் அருகில் போட்டது. எறும்பு இலையின் மீது ஏறி கரையை வந்து அடைந்தது. புறாவிற்கு நன்றி கூறி அவ்விடம் விட்டு அகன்றது. சில நாட்களின் பின் அதே மரத்தில் புறா களைப்பாற அமர்ந்தது. அவ் வழியே வந்த வேடன் ஒருவன் புறாவை கொல்ல அம்பு எய்வதற்கு ஆயத்தமானான். இதனை கண்ட கட்டெறும்பு அவன் மீது ஏறி தன்னால் முயன்றளவு பலத்தைக் கொண்டு அவனைக் கொட்டியது. அவனது அலறலைக்கேட்ட புறா பறந்து விட்டது.