நரியின் தந்திரம்


The fox's trick

ஒர் காட்டில் இறந்த நிலையில் யானை ஒன்று காணப்பட்டது. அதனைக்கண்ட நரி தன்னால் அதன் தோலை அகற்ற முடியாதென்பதை அறிந்து ஏனைய காட்டு விலங்குகளை அழைத்து யானையை உண்ணுமாறு கூறியது. எந்த விலங்குகளாலும் இயலவில்லை. சிங்கத்தை அழைத்து உண்ணும் படி கூறியது. சிங்கமோ, "வேறு யாரோ வேட்டையாடிய உணவை உண்ண மாட்டேன்." எனக் கூறியது. பின் ஓநாயொன்று அவ்வழியே வந்தது. நரி ஓநாயிடம் "நம் காட்டின் ராஜாவிற்காக இவ் உணவை பாதுகாக்கிறேன். நீ பசியாக உள்ளது போல் எனக்கு தோன்றுகிறது நீ வேண்டுமானால் சிறிதளவை உண்டு விட்டு ராஜா வரமுன் சென்று விடு" எனக் கூறியது. ஓநாயும் உண்ண ஆரம்பித்தது. உண்ணும் வேளையில் "ராஜா வருகிறார்" என சத்தமாக கூற ஓநாய் ஓடிவிட்டது. நரியோ ரசித்து ருசித்து உணவை உண்டது.