ஓர் ஊரில் ஆடு மேய்க்கும் சிறுவனொருவன் இருந்தான். அவன் தன் ஆட்டு மந்தையை தினமும் காட்டிற்கு மேய்ச்சலிற்காக அழைத்துச் செல்வான். ஒரு நாள் அச் சிறுவன் "ஓநாய் ஓநாய்" என கூக்குரலிட்டான். அதை கேட்ட ஊர் மக்கள் சிறுவனையும் மந்தையையும் காப்பாற்ற ஓடினார்கள். ஆனால் அங்கு ஓநாயை காணவில்லை. சிறுவனிடம் ஓநாய் எங்கே எனக் கேட்க, சிறுவனோ "நீங்கள் அனைவரும் ஏமாறுகிறீர்களா? என பார்ப்பதற்கே அவ்வாறு கூக்குரலிட்டேன்" எனக் கூறினான். இதைக்கேட்ட ஊரவர் கோபத்துடன் சென்று விட்டனர். அடுத்த தினமும் சிறுவன் ஆடு மேய்க்க சென்றான். அப்போது ஓநாய் உண்மையில் வந்து விட்டது. அச் சிறுவன் "காப்பாற்றுங்கள் ஓநாய் ஓநாய்" எனக் கூக்குரலிட்டான். ஊரார், "இன்றும் விளையாடுகிறான்" என எண்ணிக் காப்பாற்ற செல்லவில்லை. ஓநாய் மந்தை முழுவதையும் சிறுவனையும் கொன்று போட்டது.