உங்கள் பாடசாலையின் பெயர் என்ன?
எனது பாடசாலையின் பெயர் கொழும்பு மத்திய கல்லூரி.
உங்கள் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி எப்போது நடைபெற்றது?
கடந்த தை மாதம் பத்தாம் திகதி நடைபெற்றது.
உங்கள் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் எத்தனை இல்லங்கள் உண்டு?
பச்சை, மஞ்சள், சிவப்பு என மூன்று இல்லங்கள் உண்டு
உங்கள் பாடசாலை யிளையாட்டுப்போட்டியின் சிறப்பம்சம் என்ன?
எங்கள் பாடசாலையின் சிறப்பம்சம், இடைவேளை நிகழ்வு ஆகும் . 100 ற்கும் அதிகமான மாணவர்கள் சிறப்பான முறையில் செய்வார்கள்.
இறுதியாக வெற்றியீட்டிய இல்லம் எது?
ஜந்தாவது முறையாக மஞசள் இல்லம் முடிசூடியது
உங்கள் பாடசாலையில் நடைபெறும் பெரு விளையாட்டுக்கள் என்ன?
வலைப்பந்து, துடுப்பாட்டம், கரப்பந்து, எல்லே என்பன பரபரப்பாக நடைபெறும்.
உங்கள் பாடசாலையில் எத்தனை மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்?
சுமார் 2000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்