வணக்கம், ஒரு உதவி செய்வீர்களா?
வணக்கம், சொல்லுங்கள் முடியுமானவற்றை செய்கிறேன்.
புகையிரத நிலையத்திற்கு செல்லும் வழி யாது?
இவ் வழியாக நேராக சென்று வலப்பக்கமாக திரும்பினால் புகையிரத நிலையம் வரும்.
எத்தனை மணிக்கு ரயில் வண்டி புறப்படும்?
முற்பகல் 10 மணியளவில் புறப்படும்
இங்கிருந்து கண்டி செல்வதற்கான ரயில் கட்டணம் எவ்வளவு?
100 ரூபாய்
எத்தனை மணியளவில் புகையிரதவண்டி கொழும்பை வந்தடையும்?
பிற்பகல் 1 மணியளவில் கொழும்பை சென்றடையும்
உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி. நான் சென்று வருகிறேன்
கவனமாக சென்று வாருங்கள்