அம்மா இன்று பாடசாலை விடுமுறை நாளா?
ஆம் மகளே. இன்று பாடசாலை விடுமுறை நாள்.
இன்று மாலை எங்கே செல்லப்போகிறோம்?
இன்று நாங்கள் மிருகக்காட்சிசாலைக்குச் செல்லப்போகிறோம்
நன்றி அம்மா. அது எங்கே உள்ளது?
மிருகக்காட்சிச்சாலை வெள்ளவத்தையில் அமைந்துள்ளது.
அங்கே எவ் வகையான மிருகங்கள் உள்ளன?
அங்கே காட்டில் வசிக்கும் மிருகங்கள், நீர் வாழ் உயிரினங்கள், பறவைகள் என பலவகை உள்ளன.
மகளே காட்டின் ராஜா என்று அழைக்கப்படுபவர் யார்?
சிங்கம் தானே அம்மா
ஆம் மிகநன்று மகளே. சிங்கமும் அங்கு உள்ளது.
அப்படியா? நாம் இன்று மாலை சென்று பார்வையிடுவோம்